நாகூர் தர்காவிற்கு விலையில்லா 20 கிலோ சந்தன கட்டைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

நாகூர் தர்காவிற்கு விலையில்லாமல் 20 கிலோ சந்தன கட்டை வழங்குவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தர்கா நிர்வாக குழுவினரிடம் இன்று வழங்கினார்.

இந்தியாவில் உள்ள புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் முக்கியமானதும், சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு கந்தூரி திருவிழாவிற்கு விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று ஜெயலலிதா 2012-ம் ஆணடில் அன்று அறிவித்தார்.


அந்த அறிவிப்பின்படி, 2013-ம் ஆண்டு முதல், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாக குழுவினரிடம் முதலமைச்சர் நேற்று வழங்கினார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Exit mobile version