பொங்கல் பரிசுத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழகத்தில் 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். 

இதையடுத்து, பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை இன்று  வெளியிடப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read more – புதிய கொரோனா குறித்து இந்திய மக்கள் பயப்பட தேவையில்லை – மத்திய சுகாதார துறை அமைச்சர் உறுதி

இந்த நிலையில் பொங்கல் பரிசாக தலா ரூ.2.500 வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, திட்டத்தை தொடங்கி வைத்தார். விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர்பழனிசாமி  தொடங்கி வைத்தார் .

Exit mobile version