4 வது கட்ட ஊரடங்கு முடிகிறது….திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை !

தமிழகத்தில் 4 வது கட்ட பொது ஊரடங்கு  முடியவுள்ள நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

உலகை வாட்டி வதைத்து வரும் கொரோனாவின் பிடியிலிருந்து இன்னும் நாம் மீளவில்லை.

உலக அளவில் இதுவரை  4 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகப்பட்சமாக அமெரிக்காவில் இதுவரை 90 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 80 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மத்திய அரசு செப்டம்பர் வரையில் அறிவிக்கப்பட்ட அதே ஊரடங்கு கட்டுப்பாடுகளே இனிவரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

திரையரங்குகளில் 60 % இருக்கைகளுடன் இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 31 ஆம் தேதியுடன்  தமிழகத்தில் 4 வது கட்ட பொது ஊரடங்கு  முடியவுள்ள நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

சினிமா துறையினர் வலியுறுத்திவரும் திரையரங்குகள் திறப்பது குறித்தும் மின்சார ரயில்சேவை இயக்குவது குறித்தும் இன்று முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என தெரிகிறது.

Exit mobile version