கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 4 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களில் நேரடியாக சென்று கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் அந்த மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில் வருகின்ற 21ம் தேதி சென்னையில் இருந்து மதுரை பயணம் செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 22ம் தேதி காலை ராமநாதபுர மாவட்டத்தில் மதியம் தூத்துக்குடியிலும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதனை தொடர்ந்து 23ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும் மதியம் விருதுநகர் மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், விவசாய அமைப்பினர் தொழிற் துறையினர் ஆகியோரோடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார் இந்த பயணத்தை முடித்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் செல்கிறார்.இந்த மாத இறுதிக்குள் சிவகங்கை, புதுக்கோட்டை கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.