கணவருக்கு கொரோனா வார்டுகுள்ளேயே மதுபானம் சப்ளை செய்த மனைவி !!

கடலூர்:  சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வரும் கணவருக்கு மதுபானம் வழங்கிய குற்றச்சாட்டில் ஒரு பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு கோவிட் -19 க்கு சோதனை செய்த டி முத்துக்குமரன், 43, கொரோனாதொற்று உறுதியான நிலையில்  சிகிச்சைக்காக   கடலூர் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்நிலையில் அவரது மனைவி எம்.கலைமங்கை, 38, ஆகஸ்ட் 12 ம் தேதி இரவு உணவு அடங்கிய ஒரு பையை அவரிடம் ஒப்படைத்தார்.அதில் மதுபாட்டில்களை ஒளித்து வைத்து அவரிடம் ஒப்படைத்துள்ளார் அதனை அருந்திய சில நிமிடங்களிலேயே முத்துக்குமரன் அவருடைய வேலையை காட்ட தொடங்கிவிட்டார்  அருகில் இருந்த  சக நோயாளிகளை மிரட்டுவதும் மற்றும் அதிக  கூச்சல் போட்டு மற்ற நோயாளிகளைத் தொந்தரவு செய்த வண்ணம் இருந்துள்ளார். இதை  கவனித்த மருத்துவமனை அதிகாரிகள்  அவர் மது அருந்தி இருப்பதை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் உடனே நடவடிக்கை எடுத்த போலீஸ் கணவன்-மனைவி இரட்டையர் மீது 294 பி (அருவருக்கத்தக்க செயல்கள்), 269 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள கவனக்குறைவான செயல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 271 (தனிமைப்படுத்தப்பட்ட விதிக்கு கீழ்ப்படியாமை) ஆகியவற்றின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணைகளைத் தொடங்கியது.

Exit mobile version