சென்னை அருகே கொரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வந்த பெண், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. கிட்டத்தட்ட 5 மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்கள், தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனாலும், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்படும் சிலர், மன உளைச்சலுக்கு ஆளாகி, விபரீதமான முடிவுகளை எடுப்பது, அவ்வப்போது நடந்துக் கொண்டு தான் வருகிறது. இதனைப் போக்க, அரசு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மதுரவாயிலில் உள்ள தனியார் கல்லூரி கொரோனா வார்டில், சிகிச்சை பெற்று வந்த செல்வி என்ற பெண், மாடியில் இருந்து கீழே குதித்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் படுகாயமடைந்த அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே, அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.