மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் ;கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண்ணின் உடலை மாற்றி அனுப்பிய துயரம் ..

கொரோனா பரிசோதனைக்காக வந்த இறந்த பெண்மணியின் உடலை காணவில்லை!
குணவள்ளி

வில்லியனூர் மணவெளி திரிவேணி நகரை சேர்ந்த  குணவள்ளி வயது44, கணவர் யோகநாதன் இவரது மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த வாரம் வீட்டில் உயிர்பிரிந்தது. கொரோனோ பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை முடியும் வரை பிணவறையில் குணவள்ளியின் உடல் வைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் ஆன பிறகு அவருக்கு கொரோனோ இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்ததையடுத்து குணவள்ளியின் உடலை வாங்க குடும்பத்தினர் மருத்துவமனை வந்தபோது பிணவறையில் அவரது சடலம் இல்லை.

வேறு ஒரு பெண்மணியின் சவத்திற்கு பதிலாக குணவள்ளியின் சடலம் மாற்றி கொடுக்கப்பட்டு நேற்று இறுதி சடங்குகளும் முடிந்துள்ளது. ஊழியர்களின் அலட்சியத்தால் இரு குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

மெத்தனமாக செயல்பட்ட சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய விசாரணையை புதுச்சேரி அரசு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Exit mobile version