தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா : சுகாதாரத்துறை

தமிழகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மராட்டியத்திற்கு அடுத்த படியாக தமிழகம் 2-ஆம் இடம் வகிக்கிறது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. எனினும், கொரோனா பரவல் குறைந்தப்பாடில்லை.  

மேலும், சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  6,426  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,575 ஆக உள்ளது.தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,34,114 –  ஆக உயர்ந்துள்ளது.மேலும் தமிழகத்தில் ஒரேநாளில் 82 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,927 பேர் டிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,72,883 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version