குளித்தலை தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில், கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. எனினும், நாளுக்கு நாள் கொரோனா என்னும் கொடிய நோய் தொற்றால், பாதிக்கப்படுகிறவர்களின் தொகை உயர்ந்த வண்ணமாகவே உள்ளது. எனவே இந்த மாதம் இறுதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, கொரோனா பாதிப்பு பணிகளில் தொண்டுள்ளத்தோடு ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் எனப் பலரும் இந்த நோய் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர்.இதில் பல அமைச்சர்களும் அடங்குவர்.
இந்நிலையில், குளித்தலை தொகுதியைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளான சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 30 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா உறுதியான நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. ராமர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார்.