கொரோனா நோயாளிகளுக்கு ஒரு சந்தோசமான செய்தி!!!

உலகம் முழுவதும் பரவிவரும் கொள்ளை நோயான கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க படவில்லை.

அனைத்து நாடுகளும் தடுப்பூசி கண்டு பிடிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசியை மனிதர்கள் மேல் செலுத்தி அதில் முதல் கட்ட சோதனையில் வெற்றியும் பெற்று விட்டனர் . இந்த சூழலில் கொரோனா பாதித்த நபர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை மிகப்பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. வைரஸ் தொற்றில் இருந்து குணமானவர்களிடம் இருந்து ரத்த தானம் பெற்று, அதிலிருந்து பிளாஸ்மா எனப்படும் ஆன்டிபாடிக்களை பிரித்தெடுக்க வேண்டும். இதைக் கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை முடியும்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.3 கோடி செலவில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இது தமிழ்நாடு மருத்துவ சேவை கார்ப்பரேஷன் உதவியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தம் பெற்று, அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து சேகரித்து வைத்துக் கொள்ள முடியும்.

இதிலிருக்கும் ஆன்டிபாடிக்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் உதவிகரமாக இருக்கும். தமிழகத்தில் முதல்முறையாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஒப்புதலுடன் சென்னையில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை-யில் தற்போது வரை 26 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version