தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தலைநகர் சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது.

ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,20,716-  ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,571 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 5, 723  பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

Exit mobile version