சென்னை வந்தது கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து கோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தடைந்தன

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது. இந்த நிலையில் அந்த வைரசுக்கு தடுப்பு மருந்தால் கோவிஷீல்ட் பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டது. சீரம் நிறுவனத்திடம் இருந்து இந்த மருந்துகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி தமிழகத்திற்கு 5,56,500 தடுப்பு மருந்துகளை ஒதுக்கியுள்ளனர்.

இதில் 5,36,500 கோவிட் ஷீல்ட்டும்,  20,000 கோவாக்ஸின் தடுப்பு மருந்துகளும் ஆகும். தமிழக மருந்துக் கிடங்கு உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் முதல்கட்டமாக தடுப்பு மருந்துகள் வைக்கப்படவுள்ளன. பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் வினய் விமான நிலையத்தில் இருந்து தடுப்பு மருந்துகளை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளார். டி.எம்.எஸ் வளாகத்தில் இருந்து 10 கிடங்குகளுக்கு அந்த தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இன்று மாலை பிரித்து வழங்கப்பட உள்ளது.

Exit mobile version