கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.69 கோடி ஒதுக்கி அரசாணை!!

தமிழகத்தில் தினம் தினம் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொரோனா தடுப்பு மையங்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக ஒரே நாளில் 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 2.20-லட்சத்தை கடந்தது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,707பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,956 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிற மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.69 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version