கொரோனா இரண்டாவது அலை- எதிர்கொள்ள தயாராகும் தமிழகம்: சுகாதாரத்துறை அமைச்சர் C.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என சுகாதார துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ரூபாய் இரண்டு கோடி மதிப்பில் 16 கூறுகள் சி.டி ஸ்கேன் கருவிகளுடன் கூடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கான பிந்தைய நல்வாழ்வு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறந்து வைத்தார்.

அப்போது அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் உமாநாத், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே கொரோனா சிகிச்சையில் ஓமந்தூரார் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ௯௦ சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவின் 2-வது கட்ட அலை ஏற்படுகிறது என உலக அளவில் பேசப்படுகிறது. இந்த நிலையில் 2-வது கொரோனா அலை வராமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2-ம் அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம். பொதுமக்கள் முககவசத்தை முறையாக அணிந்து ஒத்துழைத்தால் எந்த அலையையும் தடுக்க முடியும். என சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

Exit mobile version