நகைக் கடையில் நுழைந்த கொரோனோ 50 பேருக்கு தொற்று உறுதி!!

கோயம்புத்தூர்  100 அடி சாலையில் காந்திபுரத்தில் பிரபல நகைக்கடையான கல்யாண் ஜுவல்லர்ஸ் இயங்கி வருகிறது . இங்கு கடந்த 15ஆம் தேதி  பரிசோதனையில்  அங்கு பணி புரியும்   ஒரு ஊழியருக்கு   கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் கடையில் கிருமிநாசினி முழுதுமாக தெளிக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டது .

இதனைத் தொடர்ந்து அங்கு வேலை செய்த 90 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது அதில்  சுமார் 50 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து அவர்கள் அனைவரும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை ,கற்பகம் மருத்துவமனை, கொடிசியா வளாகம் போன்ற இடங்களில் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

 ஒரே கடையில்  50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதால் சுகாதாரத் துறை கல்யாண் ஜுவல்லரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதில் அஜாக்கிரதையாக செயல்பட்டு நோய்த்தொற்றை ஏற்படுத்தியதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளார்கள் .இந்த புகாரை விசாரித்த நிலையில் காவல்துறை கல்யாண் ஜுவல்லரி மேலாளர்கள் விபின்,விஜயகுமார் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  உள்ளார்கள் கடைக்கு ஒருவாரமாக வந்தவர்கள் அனைவரையும் சுகாதாரத்துறை தனிமைப்படுத்த சொல்லி உடனே உத்தரவிட்டுள்ளார்கள்   இது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Exit mobile version