தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு

தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊரடங்கு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஜூலை மாதம் முதல் கட்டுப்பாடுகளில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் சில தொழில் நிறுவனங்கள் தங்களின் அன்றாட பணிகளை தொடங்கின, பொது மக்களும் சற்றே கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். எனினும் தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் இந்த தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் இன்று ஆகஸ்ட் மாதத்தின் இறுதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதினொன்றாவது முறையாகவும், மற்ற மாவட்டங்களில் ஒன்பதாவது முறையாகவும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காவல் துறையின் கண்காணிப்பில் பின்பற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version