விரைவில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – பள்ளிக் கல்வித்துறை

பாடத்திட்டம் குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.

சுமார் ஓராண்டுக்கு பிறகு வரும் 19-ம் தேதியன்று 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், எழும்பூரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருவதாக கூறினார்.

பாடத்திட்டம் குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். பள்ளிகள் திறக்கப்படும் அதே சமயம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நண்பர்களுடன் உணவை பகிர்ந்து சாப்பிடக்கூடாது, விளையாட்டு பிரிவு கிடையாது, மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பழக வேண்டும். நண்பர்களுடன் நெருங்கி பழகக்கூடாது என்பது வருத்தம் அளித்தாலும் கொரோனாவை ஒழிக்க அரசு கூறியபடி நடந்து கொள்வோம் என்று மாணவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

Exit mobile version