கடைசி நேர தீபாவளி வியாபாரம் களை கட்ட தொடங்கியது…

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை (14.11.2020) கொண்டாடப்படுகின்றது. இதையடுத்து தீபாவளி பொருட்கள் விற்பனை விறுவிறுப்பை அடைந்துள்ளது.

ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள், தங்க நகைகள் வாங்குவதற்காக சென்னை தி.நகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை போன்ற இடங்களில் இருக்கும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்களிடமும், வியாபாரிகளிடமும் பணபுழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் போர்வையில் சமூகவிரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 12 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை காலத்தின்போது சிறிய கடைகள், சாலையோர வியாபாரிகளிடம் ரவுடிகள் மாமூல் தொல்லை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு ரவுடிகள் மாமூல் வசூலிப்பதை தடுப்பதில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். மக்களும் தங்கள் உடமை பணம் ஆகிவற்றை பாதுகாத்து கொள்ள வேண்டும் என காவல் துறை சார்பாக கேட்கப்பட்டுள்ளது மேலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது கட்டாயம் என காவல் துறை சார்பாக கேட்கப்பட்டுள்ளது.

Exit mobile version