ஒன்றரை வயது குழந்தைக்கு எமனாக மாறிய உணவுப் பொருள்: கடைசியாக சாப்பிட்டது இதைத்தான் !

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று கடலைப்பருப்பை அதிகமாக சாப்பிட்டு, தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் விஜய். இவருக்கு தர்ஷனா என்ற ஒன்றரை வயது மகள் உள்ளார். தர்ஷனா சம்பவத்தன்று வீட்டிலிருந்த கடலைப்பருப்புகளை எடுத்து அதிகமாக தின்றதாக கூறப்படுகிறது.

ஒன்றரை வயதே ஆன குழந்தை என்பதால் பருப்புகளை சரியாக மென்று தின்ன தெரியாமல் தின்று இருக்கிறது. அந்த பருப்புகள் தொண்டையில் சிக்கிக்கொள்ள குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது.

மூச்சுத்திணறல் ஏற்பட்ட குழந்தை மயங்கி விழுந்து இருக்கிறது. இதனைக் கண்ட பெற்றோர்கள் குழந்தையை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version