நான் அரசியலுக்கு வருவதை விஜய் தடுக்கவேண்டாம்…எஸ்.ஏ.சந்திரசேகர் ஓப்பன் டாக்..

நான் அரசியலுக்கு வருவதை நடிகர் விஜய் தடுக்க வேண்டாம் என்று இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

கடந்த வாரம் நடிகர் விஜய் பெயரில் எஸ்.ஏ. சந்திரசேகர் கட்சி ஆரம்பித்தார். ஆனால் இந்தக் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நடிகர் விஜய் அறிவிக்க ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.இந்நிலையில் கட்சியின் பொறுப்பில் இருந்த விஜய்யின் தாய் ஷோபாவும் அந்த பொறுப்பிலிருந்து விலகினார்.

இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கூறும்போது, “1993-லியே நான் விஜய் ரசிகர் மன்றத்தைத் தொடங்கினேன். இப்போது அரசியல் இயக்கமாக அது மாறியுள்ளது. விஜய், இப்போது அரசியலுக்கு வர வேண்டாம்; அதே நேரத்தில் நான் கட்சி ஆரம்பிப்பதை, அவர் தடுக்க வேண்டாம்.விஜய்யின் உண்மையான ரசிகர்களுக்காக, கட்சி ஆரம்பிக்க, இதுவே சரியான தருணம். விஜய் வருவார் என நம்பி, நான் இதை ஆரம்பிக்கவில்லை. 25 ஆண்டுகளாக, விஜய்க்காக சொந்த பணத்தை செலவு செய்து உழைத்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்காகவே கட்சி ஆரம்பித்துள்ளேன்.மகனா, புருஷனா என, பார்க்கும் ஷோபாவின் நிலை கஷ்டம் தான். நான் கேட்டபோது, கையெழுத்து போட்டார். மகன் கேட்கும் போது, வாபஸ் வாங்கியுள்ளார். அவர் படிக்காமல், எதிலும் கையெழுத்து போட மாட்டார்.

நான் அரசியல் ஆர்வம் உள்ளவன். மக்கள் மீதுள்ள ஆர்வத்தை, படங்கள் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளேன். விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்கியவன், நான். அதை, ஒவ்வொரு கட்டமாக வளர்த்து வந்தவன், நான். ரசிகர்கள் எது நல்லது என நினைக்கின்றனரோ, அதை செய்யட்டும். விஜய் ரசிகர்களை பொறுத்தவரை, விஜய் வேறு; நான் வேறு அல்ல. அவரை இந்த இடத்திற்கு அழைத்து வர பட்டபாடு, எனக்கு தெரியும். இந்த இடைபட்ட காலத்தில், இருவருக்கும் தனிப்பாதை உருவாகி விட்டது” என்றார்.

Exit mobile version