10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது தவறான தகவல் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற தகவலை பரப்பி அவர்களை மனதளவில் குழப்ப வேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு 10 வகுப்பு மாணவர்கள் மட்டும் மதிப்பெண்களை அதிகரித்து கொள்ள மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை கூறியதாக தகவல் வெளியாகியது.

இந்தநிலையில், இதுகுறித்து விளக்கமளித்த பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், 10 ம் தேர்வின்றி தேர்ச்சி வழங்கிய அரசின் உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல், 10 ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி என்பது முடிந்துபோன விஷயமாகும்.

Read more – டெல்லிக்கு போதிய அளவு ஆக்சிஜனை தாருங்கள்.. இரு கைகூப்பி வேண்டும் அரவிந்த் கெஜ்ரிவால்..

மாணவர்களுக்கு மதிப்பெண்ணை உயர்த்த மாநில அளவில் பொதுவான தேர்வு என்பது தவறான தகவலாகும், இப்படி பொய்யான தகவலை பரப்பி மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version