நாமக்கல் மாவட்டத்தில் கார் மரத்தில் மோதிய விபத்தில் தே.மு.தி.க. பிரமுகர் மற்றும் அவரது மாமனார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டவர் தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் விஜய்கமல். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிந்தார். அப்பொழுது தோக்கவாடி அருகே எதிர்பாராதவிதமாக கார் மரத்தில் மோதியதில், விஜய்கமலும், விஜய்கமலின் மாமனார் ரங்கநாதனும் உயிரிழந்தனர். மேலும், அவரது குடும்பத்தினர் 4 பேரும் விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், விஜய்கமல் மற்றும் அவரின் மாமனார் ரங்கநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.