வாக்கு எண்ணும் மையத்திற்குள் சந்தேகத்திற்குரிய நபர்கள் : பொன்முடி குற்றசாட்டு

வாக்கு எண்ணும் மையத்திற்குள் இரவு நேரங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்வதாக திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வாக்கு எண்ணும் மையங்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கக்கோரி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தநிலையில், திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், மகளிர் காவலர்களுக்கான கழிப்பறையை கொண்டு செல்வதாகக் கூறி, இரவு நேரங்களில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு சந்தேகத்திற்குரிய வகையில் வாகனங்கள் செல்வதாக குற்றம்சாட்டியும், ராமநாதபுரத்தில் 31 பேர் மடிக்கணினியுடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Read more – மேற்கு வங்கத்தில் 5 ம் கட்ட தேர்தல்… பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்குப்பதிவு..

இதுகுறித்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தாக கூறப்படுகிறது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொன்முடி, நான் போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் மாணவர்களை தேர்வெழுத அனுமதித்திருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும், விரைவில் இதற்கு முடிவு வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version