தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான ரகுமான்கான், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாரடைப்பால்  காலமானார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. முன்னணித் தலைவர் ரகுமான் கான், 1977, 1980, 1984 மற்றும்1989-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தி.மு.க. ஆட்சியில் 1996-ல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தவர், ரகுமான் கான்.

ரகுமான்கான் கொரோனா நோய் தொற்று பாதிப்புக் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை ரகுமான்கானுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version