மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் திமுக தொகுதி 133 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள பிரபல செய்தி நிறுவனங்களான ரிபப்ளிக் டிவி, இந்தியா டுடே, உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும். இதில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் திமுக தான் ஆட்சியமைக்கும் என்று வெளியான தகவலால் தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவலும் கிடைத்துள்ளது.