தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசின் தடையினை மீறி திமுக தலைவர் மு.கஸ்டாலின் கிராம சபை கூட்டத்தினை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டத்தினை ரத்து செய்து அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி கிராம சபைக்கூட்டம் நடைபெறும் எனவும், தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்தித்து, வேளாண் சட்டங்களின் தீமைகளை எடுத்துரைப்பார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி தொகுதிக்கு உட்பட்ட புதுச்சத்திரம் கிராமத்தில் கிராம சபைக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு உத்தவினை மீறியும் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

Exit mobile version