தமிழகத்தில் மேலும் நீடிக்கப்பட்ட ஊரடங்கினால் எத்தனை நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு ரயில்களையும் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்து தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் நீடிக்கப்பட்ட ஊரடங்கினால் எத்தனை நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொற்றின் காரணமாக 16 லட்சத்து 93 ஆயிரத்து 879 பேர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இதனை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் அன்லாக் 3 இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இந்நிலையில் மக்களின் பொதுப்போக்குவரத்தில் ஒன்றாக ரயில் சேவை குறித்து தென்னக ரயில்வே சில முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன்படி, முன்னதாக 7 சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில், இங்கும் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சிறப்பு ரயில் சேவையை ரத்து செய்ய கோரியது.

இதன் காரணமாக  தமிகத்திற்குள்ளே பல்வேறு மாவட்டங்களில் மாட்டிக்கொண்ட மக்கள், வெளி மாநிலத்திலங்களிலிருந்து முக்கிய நகரங்களுக்கு வந்து அங்கிருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களுக்காக இயங்கிவந்த சிறப்பு ரயில் சேவை ஜூலை 31 வரை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழக அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்ததைத் தொடர்ந்து தற்போது சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், அரக்கோணம் – கோவை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவை – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version