SeithiAlai

ஊரடங்கு காலத்தில் காவல்துறையினருக்கு துணை நிற்கும் நாய்!!

சென்னை¸ ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அந்த சமயம் சாலையில்யாரும் நடமாடாத படி காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மெரினா கடற்கரை அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் நின்றுகொண்டு¸ அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி ஊரடங்கு காலத்தில் சத்தமே இல்லாமல் காவல்துறையினருக்கு ஒரு நாய் மறைமுகமாக உதவி செய்து வருகிறது. அதேவேளை சாலையில் காவல்துறை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சென்றால் இந்த நாய் சத்தமில்லாமல் இருந்து விடுகிறது. நோயின் தாக்கம் தெரியாமல் ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்ற எண்ணம் கூட சிலருக்கு ஏற்படாத நிலையில்¸ சாலையில் செல்பவர்களை நாய் விரட்டுவது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருக்கிறது என்கின்றனர் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவல்துறையினர்.

Exit mobile version