5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாளை சொட்டு மருந்து

தமிழகத்தில் நாளை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு…

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சுமார் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து போடவேண்டும். கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் என அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

கொரோனா அறிகுறி இருந்தால் சொட்டு மருந்து கொடுக்கவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்படலாம். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். தனியார் மருத்துவமனைகளிலும் சொட்டு மருந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version