குடிபோதையில் லாரி ஓட்டிய நபர் : 3 பெண்கள் விபத்தில் பலி

சென்னை அடுத்த வண்டலூர் அருகே சாலைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பெண்கள் சிலர் மரம் நடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று இந்தப் பெண்கள் மீது மோதியது. இதில் 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் சிக்கிய பச்சம்மாள், லட்சுமி என்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சுமதி என்ற பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த நபர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கு வந்த உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் லாரி ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கினர். இதையடுத்து அந்த லாரி ஓட்டுநர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். சாலைப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version