கொரோனா பரவல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாளை முதல் ஆன்லைன் வழியாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வரலாறு காணாத அளவாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாளை முதல் ஆன்லைன் வழியாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ப.தனபால் தெரிவித்துள்ளார். முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமீன் வழக்குகளில் மட்டும் அரசு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராக வேண்டும்.
Read more – தேதி குறிப்பிடாமல் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
மற்றபடி, அனைத்து வழக்கு விசாரணையும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனவும் ஏப்ரல் 23 ம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் என்றார். மேலும், ஏப்ரல் 23 ம் தேதிக்கு முன்னதாக கொரோனா சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டு மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.