தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்ட பொறுப்பாளர்கள்:
தேனி மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் சிறப்பாக நடைபெற்றவும் தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
கம்பம் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதிகள் தேனி வடக்கு மாவட்டமாகவும், போடிநாயக்கனூர் மற்றும் பெரியகுளம் (தனி) தேனி தெற்கு மாவட்டங்களாக செயல்படும். தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் என்.ராமகிருஷ்ணனும், தேனி வடக்கு மாவட்டம் பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,