தமிழகத்தில் புத்தம்புதிய அமைப்பு: எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி வட்டம் வீரசோழபுரத்தில் 104 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 ஆயிரத்து 482 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
honourablecmoftamilnadu

பட்டு வளர்ச்சித்துறை,

கால்நடை பராமரிப்புத்துறை

வேளாண்மைத் துறை

தோட்டக்கலைத்துறை

சுற்றுலாத்துறை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

கருவூல அலுவலகம்

கடவுசீட்டு அலுவலகம்

சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் போன்ற துறைகளின் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

காஞ்சீபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 37-வது மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தை கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Exit mobile version