டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் போராடி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்டங்களிலும் படிப்படியாக இத்திட்டத்தினை செயல்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபான காலி புட்டிகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் ஏற்கெனவே 9 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது. மேலும் 01.09.2025 முதல் சில மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தினால் பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதாகவும், பல்வேறு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்திலிருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. காலி பாட்டிகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டத்தினால் ஏற்படும் கடைப்பணியாளர்களின் பணிச்சுமையினை அறிவதற்கும் அவற்றை எவ்வாறு சரி செய்வது என்று ஊழியர்களை அழைத்து கூட்டம் நடத்தி இத்திட்டத்திற்கு தேவைகளை அறிந்து மற்றும் பணியாளர்களின் சுமைகளைச் கள ஆய்வு செய்து குறைப்பது, எவ்வாறு இத்திட்டத்தினைச் செவ்வனே செயல்படுத்திடத் தேவையான நடவடிக்கை எடுக்க குழு அமைப்பட்டுள்ளது. அலுவலர்கள் இத்திட்டத்தினை விதி முறைகளுக்குட்பட்டு தத்தம் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களில் மதுபான காலி பாட்டிகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை நல்வழிப்படுத்தி ஊழியர்களின் கருத்துக்களை இத்திட்டத்தினை கேட்டறிந்து தீர்வுகளைக் செவ்வனே கண்டறிந்து செயல்படுத்திட வேண்டும். மேலும், ஒவ்வொரு மாவட்டத்தின் அறிக்கைகளை அடுத்த 5 தினங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.