தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என, பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், தமிழக அரசு செலவில் மாநிலத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.