பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு

தஞ்சை மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு காவி துண்டு, தொப்பி அணிவிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை நிறுவப்பட்டு உள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் இந்த சிலைக்கு நள்ளிரவில் காவி துணி மற்றும் தொப்பி அணிவித்துள்ளனர். அதிகாலை அவ்வழியே சென்றவர்கள் இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version