ரேஷன் கடைகளில் முகக்கவசம் எப்போது கிடைக்கும்?

ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, நாட்டிலேயே கொரோனா மகாராஷ்டிராவிற்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் தான் கொரோனா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் இதன் காரணமாக மக்களுக்கு முகக்கவசங்கள் இலவசமாக தமிழ்நாடு அரசு முடிவு செய்ததுஅதன் படி,ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

அதாவது, முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:- ஆகஸ்ட் 1,3,4 ஆகிய தேதிகளில் வீட்டிற்கே சென்று முக கவசத்திற்கான டோக்கன் வழங்கப்படும். பின்னர் டோக்கனை கொண்டு சென்று 5-ந்தேதி முதல் ரேசன் பொருட்களுடன் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

Exit mobile version