வீரமரணமடைந்த தமிழ்நாடு தீயணைப்பு படை வீரரின் குடும்பத்துக்கு நிதி.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டியை  சேர்ந்தவர்  ராஜ்குமார்.  சிறுவயது முதலே பிறக்கு உதவும் குணம் கொண்ட இவர், கடந்த  2006 ஆண்டு தீயணைப்பு  படையில் வீரராக சேர்ந்தார்.
ராஜ்குமார்

தீயணைப்புப் பணி என்பது சாகசம் நிறைந்தது  கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரம்பலூர் செல்லியம்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் மீட்க ராஜ்குமார் கிணற்றில் இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் இருந்த விஷவாயு வெளியாகி மூச்சுத் திணறி தீயணைப்பு வீரர் பலியானார். 

இந்நிலையில் தீயணைப்பு மீட்புத் துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு பெரம்பலூர் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜ்குமாரின் உருவப் படத்தை திறந்துவைத்து, தீயணைப்புத் துறை சார்பில் அவரது குடும்பத்துக்கு ரூ.44.42 லட்சம் நிதி உதவியை வழங் கினார்

அவர் பேசியபோது, “மீட்பு  பணியின் போது உயிரிழக்கும் தீயணைப்பு- மீட்பு படை வீரர்களின் குடும்பத்துக்கு தீயணைப்புத் துறை எப்போதும் துணை நிற்கும். மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்புத் துறை வீரர்கள் அவர்களின் சொந்த முயற்சியில் திரட்டிய ரூ.44.42 லட்சம் நிதி, ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு ராஜ்குமாரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி, அவரது மனைவிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேலை வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள 349 தீயணைப்பு நிலையங்களில் கடந்த ஆண்டு 7,500 தீயணைப்பு வீரர்கள், சுமார் 50,000 தீயணைப்பு உதவி தொலைபேசி அழைப்புகளை பெற்று 25,000 மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

1956-ம் ஆண்டிலிருந்து இதுவரை 59 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின்போது வீர மரணம் அடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார் 

Exit mobile version