தண்ணீர் டேங்க் மேலே ஏறி தற்கொலை முயற்சி விரைந்து காப்பாற்றிய தீயணைப்பு படையினர் !!

நெல்லை: தன்னுடைய சொந்த  இடத்தை மாநகராட்சி எடுத்துக் கொண்டதாக  தெரிவித்துவிட்டு நெல்லையில் குடிநீர் டேங்க்கில்   மேலேறி தற்கொலை செய்துகொள்ள போவதாக ஒரு  மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட வரை தங்கள்  உயிரையும் பொருட்படுத்தாமல் தீயணைப்புத் துறையினர்  விரைந்து மடக்கிப் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
நெல்லை  மேலப்பாளையம், கணேசபுரம் வடக்குத் தெருவை  சேர்ந்த ஏசி மெக்கானிக்கணேசன்(46).  அவரின் மனைவி  மற்றும் இரு பெண்  குழந்தைகள். தற்போது  சென்னையில்  உள்ளார்கள். இவருக்கு சொந்தமான 50 சென்ட் இடம்  நெல்லை  சேவியர் காலனியில் இருந்தது. அந்த இடத்தை மாநகராட்சி லே அவுட் அப்ரூவல்   அடிப்படையில் குடிநீர் டேங்க் கட்ட எடுத்துக் கொண்டதாக கூறி வந்தார்.
இதுதொடர்பாக  அவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்  வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்த பிறகும்  அவரது இடத்தை திரும்பத் தர அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் செய்த பாடில்லை.



எனவே, தனது இடத்தை  தன்னிடம் திருப்பித் தருமாறு கேட்டு  சில நாட்களாக உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார் அதன்பிறகும் எந்த  நடவடிக்கையும் இல்லாததால், சுதந்திர தினமான நேற்று காலை 6.30 மணிக்கு நெல்லை புதிய  பேருந்து நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனி  குடிநீர் மேல்நிலை  நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிய கணேசன், எனது நிலத்துக்கு தீர்வு இல்லாததால்  தற்கொலை செய்யப் போவதாகக்கூறினார்.


இதுகுறித்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுர். சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த பாளை. தீயணைப்புதுறையினர்  மற்றும் போலீசார்,டேங்கின் மீது ஏறி அவரிடம்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்த பேச்சுவார்த்தை  நடந்த நிலையில் நிலையில் அவர்  திடீரென டேங்கிலிருந்து கீழே குதிக்க முயற்சித்தார். கையில் ஒரு சிறிய  பாட்டிலில் பெட்ரோலும் நிரப்பி வைத்திருந்தார். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலிருந்த கணேசனை துள்ளியமாக செயல்பட்ட தீயணைப்பு  வீரர்கள்  விரைந்து சென்று மடக்கிப்  பிடித்து காப்பாற்றினர். 

பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சு.வீரராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு அங்கிருந்த காவல்துறை மற்றும் வருவாய் துறை மாநகர உயர் அதிகாரிகளால் வெகுவாக பாராட்டப்பட்டது. அப்பகுதி பொதுமக்களும் இந்நிகழ்வை வெகுவாக பாராட்டினர். மென்மேலும் தீயணைப்புத் துறையின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Exit mobile version