தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்…

பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் பெண் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளது பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் டிவிகே நகர் சாமி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி – சவித்ரி தம்பதியினரின் மகள் வீரலட்சுமி (30). இவருக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் இவர் கடந்த 3 வருடங்களாக தனது கணவருக்கு உதவியாக கால் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் இந்தப் பணிக்கு விண்ணப்பித்து கடந்த மாதம் இவருக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உள்பட பல நூறு நோயாளிகளை கடந்த ஒரு மாதமாக தனது ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு வீரலட்சுமி அழைத்துச் சென்றுள்ளார்.

பணியில் சேர்ந்த பின்பு தான் தெரிந்தது தான் தான் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்பது. 108 ஆம்புலன்ஸ் அதிவேகமாக ஓட்டுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை. என்னைபோல் அனைத்து பெண்களும் மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் பல்வேறு பணிகளில் சேர வேண்டும் என்கிறார் பெருமையாக!

ஆக, “தடை அதை உடை, புது சரித்திரம் படை!” என்ற வாசகத்திற்து ஏற்ப பெண்கள் ஒவ்வொரு விசயத்திலும் சாதித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

Exit mobile version