எம்.ஜி.ஆருக்கு ஆதரவு அளித்த அனைவரும் ரஜினிக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்று முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை:
நடிகர் ரஜினி காந்த் தனது அரசியல் வருகை குறித்து நேற்று தகவல் ஒன்றை வெளியிட்டார்.அதில் வரும் டிசம்பர் 31 அரசியல் வருகை,ஜனவரியில் கட்சி துவக்கம் போன்றவற்றை வெளியிட்டார்.இதை பார்த்து பல முன்னணி அரசியல் தலைவர்களும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர்.இந்த நிலையில் முன்னாள் பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:ரஜினி காந்த் அரசியல் வருகை சாதாரண அறிவிப்பு அல்ல.இது தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
1972-ல் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த மாற்றத்தைப்போல,ரஜினி காந்த் அவர்களும் 2021 அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவார்.எம்.ஜி.ஆருக்கு ஆதரவு அளித்த அனைவரும் ரஜினிக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்றார்.மேலும் அவர் கொரோனா காலத்திலும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு முழு நேர அரசியலில் ஈடுப்பட ரஜினிக்கு என் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு இருந்தார்.