சென்னை மாநகர பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்ய, நாளை முதல் டோக்கன்கள் வழங்கப்பட இருக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக சென்னையில் முதியவர்களுக்கு, இலவச பேருந்துப் பயண டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை முதல், இலவச பயண டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், டோக்கன் பெறுவதற்காக, www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னையிலுள்ள 21 பணிமனைகள் மற்றும்19 பேருந்து நிலையங்களில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். தகுதிவாய்ந்த முதியவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள மையங்களில் டோக்கன்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 10 வீதம், ஆறு மாதங்களுக்கான டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.