ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தி : தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரிழந்த வாலிபர்

ஆன்லைன் ரம்மியில் விளையாட்டில் ரூ7.64 லட்சம் இழந்த விரக்தியில் தண்டவாளத்தில் தலைவைத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர்:

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த எல்வின் பிராட்ரிக்( வயது 30 ). கோவையில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த நிலையில் நண்பர்களின் அறிமுகத்தால் ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் பணம் செலுத்தி விளையாடி வந்துள்ளார்.

Read more – போலியோ சொட்டு மருந்து முகாம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் : மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

ஆரம்பத்தில் குறைந்த பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுள்ளார். அதன் பிறகு ஏராளமான பணத்தினை முதலீடு செய்து தொடர்ந்து தோல்வியை அடைய, இழந்த பணத்தை திரும்ப பெறுவதற்காக நண்பர்கள் மற்றும் வங்கியில் சுமார் 7.64 லட்சம் பெற்றுள்ளார்.

இந்தநிலையில், நண்பர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில் ஊத்துக்குளி ரோடு 2 வது ரயில்வே கேட் அருகில் கடந்த 5 ம் தேதி ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து மரணித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே தமிழகத்தில் இந்த ஆன்லைன் விளையாட்டு மூலம் பணம் இழந்து ஒரு போலீசார் உட்பட 13 தற்கொலை செய்துகொண்ட நிலையில் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்தது. தற்போது மேலும் இதுபோல் தற்கொலை தொடர்ந்து நடைபெறும் நிலையில் மத்திய அரசு விரைவில் இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

Exit mobile version