போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் சந்திப்பு

போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார்

சென்னை:

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.அரசியலுக்கு வருவது குறித்தும்,அவரது அரசியல் நிலைப்பாடு குறித்தும் அந்த ஆலோசனை கூட்டத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசப்பட்டது.அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அளித்த பேட்டியில்:“அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன். நான் எடுக்கும் முடிவுக்கு மாவட்ட செயலாளர்கள் கட்டுப்படுவதாக கூறினார்கள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்,நடிகர் ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

Exit mobile version