கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த நூலகங்கள் அனைத்தும் மீண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் அதிகம் வந்து செல்லும் பொது இடங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தும் செயல்படுவதற்கு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த நூலகங்கள் எப்போதும் திறக்கப்படும் என வாசகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில் அரசிற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் தமிழக கிராமப்புற கோவில்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போது நூலகங்களும் திறக்கப்படும் என நினைத்த வாசகர்களுக்கு ஏமாற்றம் தான் ஏற்பட்டது.
இந்த நிலையில் புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் நூலக பிரியர்களுளக்கு மகிழ்ச்சி அளிக்கும் விசயமாக தமிழகத்திலுள்ள கன்னிமாரா நூலகம், அண்ணா நூலகம், மாவட்ட தலைமை நூலகம், கிளை மற்றும் கிராமப்புற நூலகங்கள் என 4,638 நூலகங்கள் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் பகுதி நேர நூலகங்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு கொரோனா விதிமுறைளைளையும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் பின்பற்றற வேண்டும் என அனைத்து நூலகங்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
நூலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
அரசு நூலகங்கள் வந்து படிப்பதற்கு 65 வயது மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை.
வாசகர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருப்பதோடு, சமூக இடைவெளியினையும் கடைப்பிடிக்க வேண்டும்.
மாவட்ட தலைமை நூலகம், கிளை மற்றும் கிராமப்புற நூலகங்கள் அனைத்தும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
பகுதி நேர நூலகங்களுக்கு அனுமதி கிடையாது.
நூலகங்களில் புத்தகங்களைப் பெறுவது, குறிப்புகளை எடுப்பது, புத்தகங்களை எடுத்து வந்து படிப்பது போன்றவற்றை மேற்கொள்ள அனுமதி
கிளை மற்றும் கிராமப்புற நூலகங்களில் புத்தகங்களைக் கையெழுத்திட்டு பெறும் பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.