அரசு பேருந்தை காணவில்லை… ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

அரசு பேருந்தை காணவில்லை என பொதுமக்கள் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த உதய மார்தாண்டாபுரம் – நாச்சிக்குளம் வழியாக பட்டுக்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்துகள் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு முறையாக இயக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் பேருந்துகள் இயக்கப்படாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள், பட்டுக்கோட்டை கிளை மேலாளரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், பள்ளிக்கும், வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் திண்டாடி வந்துள்ளனர். இந்நிலையில் ஊர் முழுவதும் அரசு பேருந்தைக் காணவில்லை என போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை காண்பித்துள்ளனர்.

Exit mobile version