முதல்வர் பழனிசாமியை சந்தித்தது மகிழ்ச்சி : தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன்

முதல்வர் பழனிசாமியை சந்தித்தது மகிழ்ச்சி  என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளில் திறமையான பேச்சாளுமைமிக்க அரசியல்வாதி என்று புகழ் பெற்றவர் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் அடுக்குமொழி பேசி ரசிக்கவைப்பார்கள்.

இந்நிலையில், இன்று பழனி மலை முருகன் கோயிலுக்குச் செல்ல  மதுரை விமான நிலையம் வந்தபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த நிகழ்வை தமிழிசை செளந்தரராஜன் ரைமிங்காக அவரது பாணியிலேயே பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்  “பழனி சென்று ஆண்டவன் பழனிசாமியை தரிசிக்க மதுரை விமான நிலையம் வந்தபோது மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அவர்களை எதிர்பாராத விதமாக சந்தித்தது மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் ‘ஆளுநர் ஆனாலும் உங்கள் அடுக்குமொழி குறையவில்லை அக்கா’ என்று பலர் பாராட்டியிருக்கிறார்கள்.

Exit mobile version