அரசின் அதிர்ச்சி உத்தரவு 6 மாதங்களாக பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியத்துக்குத் தடை!!.

ஆறு மாதத்துக்கும் மேலாக தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எ எடுக்காமல் இருப்பவர்களுக்கு ஓய்வூதியத்தை தடை செய்யச் சொல்லி அரசு அறிவித்துள்ளது

இதற்கான அறிக்கையை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சமயமூர்த்தி அனைத்து மண்டல இயக்குனர்களுக்கும் கருவூல அலுவலர்களுக்கும் அண்மையில் அனுப்பி வைத்துள்ளார். அதன் விவரம் வருமாறு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது வங்கி கணக்கிலேயே   ஓய்வூதிய தொகை  செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதமாக  எந்தப் பண பரிவர்த்தனையும் நடக்காமல் இருக்கும் பட்சத்தில் அத்தகவலை சம்பந்தப்பட்ட வங்கி  முழு பட்டியலுடன் கருவூலத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் .

ஆறு மாதமாக வங்கிக்கணக்கில் இருந்து தற்போது வரை பயன்படுத்தாமல் உள்ள ஓய்வூதிய தொகையை வங்கி மீட்டு பெற்று அதனை  அரசாங்க வங்கி கணக்கில்  சேர்த்துவிட வேண்டும் இது தொடர்பான பணிகளை கருவூலத் துறை மண்டல இணை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் .இந்த  கொரோனா   நேரத்தில்  மற்றும் வயதுமுதிர்வு  போன்ற காரணங்களால்  தற்போது  வங்கிகளுக்கு சென்று  பணபரிவர்த்தனை செய்வது என்பது  இயலாத காரியமாகவே இருக்கின்றது அதன் காரணமாகவே பலரும் வங்கிகளுக்கு செல்லாமல் தவிர்த்து வருகின்றனர்.எனவே ஓய்வூதியதாரர்கள்  அனைவருக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற உத்தரவுகளை தயவு செய்து திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர் ..

Exit mobile version