அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு -அமைச்சர் கே.பி.அன்பழகன்



அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன்


இதுதொடர்பாக, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாமாண்டு பட்டய படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 20-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 16,940 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

04.08.2020 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரி மாணவர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவை 20.08.2020 வரை மேற்கொள்ளலாம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் 10.08.2020 முதல் 20.08.2020 வரை மேற்கொள்ளலாம். என தெரிவித்துள்ளார்.

Exit mobile version