மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு – முதலமைச்சர் அதிரடி

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாட்டின் 74-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4வது முறையாக மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் முதலமைச்சர் பேசியதாவது: நான்காவது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன்.

சுதந்திர போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் 16 ஆயிரத்தில் இருந்து 17 ஆயிரமாகவும்,
சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 8 ஆயிரத்தில் இருந்து 8,500 ஆக உயர்தது வழங்கப்படும் என அறிவித்தார்.

வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது திட்டத்தின் மூலம் 64, 661- வெளிநாட்டு தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் குறைவாகவே உள்ளது என்றார்.

கொரோனாவை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிசச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என பேசினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, விரைவில் திறக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

கொரோனா நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு நிதியிலிருந்து ரூ.6650 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன். அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன் என பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version